புனே:

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதா தொகுதியில் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என புனே நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சரத்பவார் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை 14 தேர்தல்களில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றிருக்கிறேன். என்னை தலைவராக உறுதிப்படுத்த 15-வது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை. மேலும், என் குடும்பத்தை சேர்ந்த இருவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதால் நான் போட்டியிட வேண்டாம் என்று தீர்மானித்துள்ளேன் எனவும் சரத்பவார் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here