திருவள்ளூர், சனவரி. 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறையின் கீழ் சாலை விரிவாக்கப் பணிக்காக தனியார் நிலங்களை அரசு சார்பில் கையகப் படுத்தப் பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டம் கணேஷ் நகரில் உள்ள 1700 ச.அடி நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தியது. இந்நிலையில் தனியார் நில உரிமையாளருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மாற்றி முன்னாள் நில உரிமையாளருக்கு அவ்விழப்பீட்டு தொகையை வழங்கிவுள்ளது. அது தெரியாமல் கடந்த 12 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட நிலத்தின் உண்மையான உரிமையாளர் இழப்பீட்டுத் தொகைக்காக ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் சென்று ஏறியிறங்கி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி ஸ்ரீதேவி நகர் பகுதியில் வசிப்பவர் ஜாய், மேலும் அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அம்பத்தூர் பகுதி கபிலர் நகர் தெருவில் வசிக்கும் வாசுதேவன் என்பவரிடம் இருந்து அவருக்கு சொந்தமான ஸ்ரீ கணேஷ் நகரில் உள்ள 1700 ச.அ. காலி மனையை, ( மனைப்பிரிவு எண் 12 ) முறைப்படி திருவள்ளுவர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்து வாங்கிவுள்ளார்.
மேலும் 1700 ச.அ அளவிலான அந்நிலத்திற்கு திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாய் பெயருக்கு பட்டா பெயர் மாற்றமும் செய்து ( பட்டா எண் – 153 ) வாங்கிவுள்ளார்.
மேலும் முறைப்படி நில உரிமையாளருக்கான அனைத்து அரசு ஆவணங்களும் அவரிடம் உள்ள நிலையில், ஜாய் க்கு சொந்தமான நிலத்தின் வழியாக நெடுஞ்சாலை 205 திட்டத்தின் படி சாலை விரிவாக்கம் பணி தொடர்பாக 1700 சதுர அடி இடமும் அரசால் கையகப் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரின் நில கையகப்படுத்தலுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நெடுஞ்சாலை துறையால் வெகு ஆண்டுகளாக வழங்கப் படாததால், அவர் தனக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நில எடுப்பு வருவாய்துறைச் சார்ந்த மாவட்ட வருவாய் அலுவலருக்கு மனு அளித்தும் அவரிடம் இருந்து இதுவரை எந்தவித இழப்பீட்டுத் தொகையும் வழங்காததால் அதிர்ச்சிக்கு உள்ளான அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிய மனுவில் தனி வட்டாட்சியர் இதற்கான தொகையை கடந்த 2012 ஆம் ஆண்டு வாசுதேவன் என்பவருக்கு காசோலையாக வழங்கப்பட்டுள்ளதாக பதில் அளித்துள்ளார்,
ஆனால் அரசின் வழிகாட்டுதலின் முறைப்படி கடந்த 2008 ஆம் ஆண்டு வாசுதேவன் என்பவரிடம் இருந்து ஜாய் நிலத்தை முறைப்படி பதிவு செய்து தனது பெயரில் பட்டா பெற்ற நிலையில் தற்போது நிலத்தின் உரிமையாளர்க்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிலம் விற்றவர்க்கு வட்டாட்சியர் தவறுதலாக வழங்கி உள்ளார் என உண்மையான நிலத்தின் உரிமையாளர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிவுள்ளார்.
மேலும் அம்மனுவில் நிலத்தின் உரிமையாளர்க்கு சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலருக்கு உத்தரவிட வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் யிடம் கோரிக்கை மனு விடுத்துள்ளார்
மேலும் இதுப் போன்று பல பேருக்கு இழப்பீடு தொகை மாற்றி வழங்கப் பட்டுள்ளதாகவும், அதனால் உடனடியாக பாதிக்கப்பட்ட நில உரிமைதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் எனவும் ஜாயின் வழக்கறிஞர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டி ஜாய் …
நில உரிமையாளர் மற்றும் அவரது வழக்கறிஞர்




















