குன்றத்தூர், ஏப். 08 –
குன்றத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மத்திய அரசை கண்டித்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கேஸ் சிலிண்டர் மற்றும் இரு சக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து பாடையில் படுக்க வைத்து பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலையருகே நாளுக்கு நாள் ஏறிவரும் பெட்ரோல், டீசல்,சுங்கவரி விலைவாசி ஏற்றத்தைக் கண்டித்து விசிக மாவட்ட பொருளாளர் புரட்சிதாசன், தலைமையில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதில் எரிபொருள்கள் விலை,சுங்க சாவடி விலை ஏற்றத்தை கண்டிக்கும் விதமாக இருசக்கர வாகனம் மற்றும் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடைகட்டி மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி விசிக வை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் கொடி மற்றும் பதாகையுடன் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ,
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக குன்றத்தூர் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். விலைவாசி ஏற்றத்தை குறைக்காவிட்டால் போராட்டம் தொடரும் என விசிக வினர் தெரிவித்தனர்.






















