காட்டுப்பள்ளி, ஜன. 22 –
திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்.அன்.டி. மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுக சாலை வளைவில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிக்கவும், மேலும் அவசர ஊர்திக்கு வழி விட்டு செல்லும் படியும், இருசக்கர வாகனம் ஓட்டும் போது இருசக்ர வாகன ஓட்டிகள் தவறாமல் தலைக்கவசம் அணியவும், மேலும் விபத்து ஏற்பட்டால் அவசர உதவிக்கு தொலைபேசி எண்.108-யை அழைக்கவும், வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தும் போது பார்க் விளக்கை எரிய விடவது உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளையும்,
மேலும், சாலையை கடக்கும் போது மொபைல் போனில் பேசுவது,18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கக்கூடாது, சீட்டு பெல்ட் அணியாமல் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவது, மருத்துவமனையை கடக்கும்போது அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்களை பயன்படுத்துவதை தவர்ப்பது, மேலும், அதி வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது உள்ளிட்ட வாகன ஓட்டிகள் செய்யக்கூடாத மற்றும் கடைப்பிடிக்க கூடியதுக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து இதுக்குறித்து வாசகங்கள் பொறிக்கப்பட்ட காகித துண்டு பிரசுரங்களை அவ்வழியாகச் சென்ற இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சாவி கொத்து, கைப்பேசி தாங்கிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் இந் நிறுவனத்தின் தலைமை அலுவலர் குமார், மனித வள மேம்பாட்டு அலுவலர் ராஜேஷ், பாதுகாப்பிற்கான தலைமை அலுவலர் மனோஜ் குருவில்லா மற்றும் காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன் உள்ளிட்டவர்களும் மேலும் வார்டு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்டவர்களும் உடன் இருந்தனர்.
மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் காட்டூர் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


























