கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில், அனைத்து தொழிலாளர்களையும் அரசு ஊழியர் ஆக்குவதும். அனைத்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் டி.ஏ. உயர்வை உடனே வழங்கவும். 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே அமல்படுத்திட கோரியும், திமுக அரசை கண்டித்தும் அரசு போக்குவரத்து கழக வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மண்டல செயலாளர் திருநீலகண்டன், தலைமையில் நடைபெற்றது.
அதில் மாநில பொருளாளர் அப்துல் ஹமீது, மண்டல தலைவர்கள் சங்கர், கதிரவன், விஜயகுமார், மண்டல பொருளாளர் மாறன், தமிழ் மாநில காங்கிரஸ் மண்டல செயலாளர் ராதாகிருஷ்ணன், பாமக மண்டல செயலாளர்கள் ராமலிங்கம், பன்னீர்செல்வம், நேதாஜி தொழிலாளர் சங்க பேரவை மண்டல செயலாளர் ஜெயக்குமார், எஸ்சி எஸ்டி மண்டல செயலாளர் ரவி, தேமுதிக மண்டல செயலாளர் சீனிவாசன், பி எம் எஸ் மண்டல செயலாளர் வைத்தீஸ்வரன், டி ஏ மீட்புக் குழு செயலாளர்கள் பாபு ராஜன், மனோகரன், ராஜா, இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.



















