கோயம்பேடு, ஏப். 02 –
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் மீரா (40), பி.எட்., படித்து முடித்து விட்டு ஆசிரியர் வேலை தேடி வந்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மீராவிற்கு அறிமுகமான மதுரவாயலை சேர்ந்த சுந்தரகுமார் (47), இவரது மனைவி பிரியா (37), ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறிவுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு கோயம்பேட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து மீராவிடம் ரூ.10 லட்சம் பெற்று கொண்டதாகவும், இதுவரை வேலை வாங்கித் தராமலும் கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்ததாக மீரா கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் வழக்கு பதிவு கோயம்பேடு போலீசார் சுந்தரகுமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள சுகுமாரனை தேடி வருகின்றனர்.





















