திருவாரூர், மார்ச். 05 –

திருவாரூர் முப்புரம் எரித்த ஸ்ரீபீடாரி அம்மன் ஆலயத்தின் மாசிமக திருவிழாவின் 9ம் நாள் விழாவாக மதியம் 1 மணிக்கு ஸ்ரீஉச்சிகாளியம்மன் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி மிக விமர்சையாக நடைபெற்றது.

சைவ சமயத்தின் தலைபீடமாக விளங்கும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் உபகோவில்களில் ஒன்றான முப்புரம் எரித்த ஸ்ரீபிடாரி அம்மன் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த சிறப்புமிக்க ஆலயமாகும்.

மேலும்  இவ்வாலயத்தில் உள்ள ஸ்ரீபிடாரியம்மன் திருவாரூர் நகர எல்லை தெய்வமாக விளங்கி வருகிறது. இச்சிறப்புமிக்க இவ்வாலயத்தின் மாசி மக திருவிழா கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும், மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்று ஆலயத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீபிடாரியம்மனுடன் ஸ்ரீஉச்சிகாளியம்மன் ஆலயத்தின் பிரதான வீதிகளில் எழுந்தருளினார்.

ஸ்ரீஉச்சிகாளியம்மன் ஆலயத்தில் இருந்து வெளியே வரும் போது ஆக்ரோஷமாக இருந்த நிலையில், கோபத்தை தனிக்க ஸ்ரீஉச்சிகாளியம்மனுக்கு பிடாரியம்மன் கோவில் சந்து பகுதிக்கு எழுந்தருளிய போது அங்கு ஆட்டுகிடாவினை  பலிகொடுத்து சுவாமியை சாந்தப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து  ஸ்ரீஉச்சிகாளியம்மன் வீதிகளில் வலம் வந்த போது பக்தர்கள் ஸ்ரீஉச்சிகாளியம்மன் பாதங்களில் அபிஷேகம் செய்தும், சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் நினைத்த காரியம் கைகூட வேண்டியும், பெண்கள் திருமண கைகூடவும், குழந்தை பாக்கியம் கிட்டவும், ஸ்ரீஉச்சிகாளியம்மனை வணங்கி மனமுருக வழிபட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here