மயிலாடுதுறை, மார்ச். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலூக்கா, திருவாலங்காடு பகுதியில், திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மிக பழைமை வாய்ந்த வண்டார்குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

மேலும் அக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா மிக சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கமாகும். அது போல் நடப்பண்டில் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் ஒன்பதாம் நாள் திருவிழாவான திருத்தேர் பவனி நடைபெற்றது. அவ்விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்திழுத்து  ஓம் நமச்சிவாய,  அரோகரா என முழக்கமிட்டனர்.

அதனை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்பாள் வண்டார்குழலி உடனாகிய வதான்யேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தவாரே நான்கு மாடவீதிகளில் திருத்தேரில் பவனி பவனி வந்த நிகழ்வு நடைப்பெற்றது. அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் ஆரத்தி எடுத்தனர்.. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து அரோகரா அரோகரா என கோஷமிட்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here