மீஞ்சூர், மார்ச். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 7.எண்ணிக்கை மின்கல வாகனங்கள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதலாக 7 மின்கலம் வாகனங்கள் வழங்கும் விழா மீஞ்சூர் பஜார் பகுதியில் நடைபெற்றது.

அவ்விழாவிற்கு மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அலெக்சாண்டர்,முன்னாள் பேரூராட்சி தலைவர்கள் சுப்பிரமணி, ராஜேந்திரன், உள்ளிட்டவர்கள். முன்னிலையில் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்துவதற்காக ரூ. 9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 7 எண்ணிக்கையிலான மின்கல வாகனங்களை வழங்கினர்.

மேலும் சிறப்பூட்டும் விதமாக துப்புரவு பணியாளர்களாக பணி புரியும் பெண் ஊழியர்களிடம் பயிற்சி அளித்து வாகனத்திற்கான சாவியை ஒப்படைத்து பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மக்களின் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவங்கி வைத்தார்,

மேலும் அந்நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் சுகன்யா வெங்கடேசன்,அபூபக்கர், ரஜினி,ஜெயலட்சுமி தன்ராஜ்,ஜெயலட்சுமி ஜெய்சங்கர்,குமாரி புகழேந்தி,கவிதா சங்கர், சங்கீதா சேகர்,ராஜன், நக்கீரன்,பரிமளா அருண்குமார்,துப்புரவு பணி மேற்பார்வையாளர் கோபி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here