தஞ்சாவூர், பிப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர்

தஞ்சாவூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100 சதவீதம் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, அதைப்போல் தஞ்சாவூரில் போக்குவரத்து காவல் பிரிவு சார்பில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இன்று ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சுமார் 50 நபர்களுக்கு ஒரு கிலோ பூண்டு இலவசமாக வழங்கப்பட்டது.

பூண்டு இதயத்தை காக்கும், ஹெல்மெட் தலைமுறையை காக்கும் என்ற கருப்பொருளை முன்னிறுத்தி ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ்குமார் உள்ளிட்ட போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பூண்டு வழங்கினார்கள்.

பூண்டு கிலோ ரூபாய் 600 க்கு விற்கும் நிலையில் வாகன ஓட்டிகள் இன்று போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பூண்டுகளை பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

மேலும் அந்நிகழ்வுக் குறித்து போக்குவரத்து காவல்ஆய்வாளர் ரவிச்சந்திரன் கூறும் போது தஞ்சாவூரில் 80 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனம் ஒட்டி வருகின்றனர், மேலும் அதனை 100 சதவீதம் ஹெல்மெட் அணியும் வரை தொடர்ந்து இதுபோல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று அப்போது அவர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here