திருவாரூர், மே. 20 –

தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …

திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது.  அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில் இருந்து விரைவு பயணிகள் இரயில் அதிகாலை 1.30 மணிக்கு இயக்கப்படுகிறது.  ஒவ்வொரு இரயிலும் சுமார் 22 பெட்டிகளுக்கு மேல் இணைக்கப்பட்டு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

ஆனால் இரயில்வே நிர்வாகம் இரயில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் பயணிகளின் உயிருக்கும், உடைமைக்கும் கேடு விளைவிளைவிக்கும் வகையில் மெத்தனப் போக்குடன் செய்ல்பட்டு வருகிறது.

சுமார் 3/4 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நீண்டு காணப்படும்  திருவாரூர் இரயில் நிலைய நடைமேடை பகுதியில் போதிய மின்விளக்கு வசதியினை இரயில்வே நிர்வாகம் செய்து தராததால் இரயில் நிலையம் இரவு நேரங்களில் இருளில் முழ்கி அபாயகரமான நிலையில் காணப்படுகிறது. அதனால் பயணிகள் இரவு நேரங்களில் கடும் இன்னலுக்கு ஆளாகி வருவதோடு, குறிப்பாக முதியோர்கள், மாற்றுதிறனாளிகள் இருளில் சிக்கி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இருளில் முழ்கி கிடக்கும் திருவாரூர் இரயில் நிலையத்தின் நிலையை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இரயில்நிலைய நடைமேடையில் முகாமிட்டு பயணிகளது உடைமைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களும் தொடர்கதையாக அறங்கேறிய வண்ணம் இருந்து வருகிறது.

இதுதவிர இரயில் நிலைய நடை மேடையில் பயணிகள் அமர்வதற்கு தேவையான இருக்கைகள் இல்லாததால் தரையில் அமர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

எனவே தென்ன இரயில்வே திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட திருவாரூர் இரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைகளிலும் பயணிகள் நலன் கருதி  போதுமான மின்விளக்குகளை ஒளிரச்செய்து பயணிகளின் உயிருக்கும் உடைமைக்கும் உத்தரவாதம் அளிப்பதோடு, நடைமேடைகளில் பயணிகள் அமர்வதற்கு போதிய இருக்கை வசதிகள் செய்துதர வேண்டியும் திருவாரூர் இரயில் பயணிகள்  நலச்சங்கத்தினர் திருச்சி கோட்ட மேலாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here