பொன்னேரி, மார்ச். 16 –
திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியினருக்கு புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பொன்னேரி நகராட்சி, மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம் ஒன்றியங்கள், ஆரணி, ஊத்துக்கோட்டை, மீஞ்சூர் பேரூராட்சிகளுக்குள் அடங்கிய அதிமுக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் வழங்கினார்.
மேலும், இதில் ஒன்றிய செயலாளர்கள் கும்மிடிப்பூண்டி கோபால் நாயுடு, சோழவரம் பிரகாஷ், மீஞ்சூர் முத்துக்குமார், பொன்னேரி செல்வகுமார், மீஞ்சூர் பட்டாபிராமன் உள்ளிட்டவர்கள் புதிய உறுப்பினர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் போது, அதிமுக நிர்வாகிகள் பஞ்செட்டி நடராஜன், பொன்னுதுரை, அபிராமன், சுமித்ராகுமார், காமராஜ், எஸ்.பி.அருள், மீஞ்சூர் மாரி, எம்.வீ.எஸ்.தமிழரசன், காண்டீபன், ஸ்ரீதர் உள்ளிட்ட முக்கிய அதிமுக கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.





















