திருவாரூர், ஆக. 01 –

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைசேரி பகுதியில் அமைந்துள்ள அரசு கல்லூரியில் படித்து வருபவர்கள் கபிலன் மற்றும் விஜய் சங்கர், இந்நிலையில் அவர்கள் இருவரும் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த டாட்டா மேஜிக் எனும் சரக்கு வாகனம் வந்துள்ளது.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த கல்லூரி மாணவர்கள் வலதுப்பக்கமாக திரும்பும் போது, விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே கபிலன் என்ற மாணவர் உயிரிழந்தார். மேலும் அவ்வருடன் வந்த விஜய் சங்கர் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர் மீட்டு அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு அம்மருத்துவமனையில் தீவிர சிகிச்சையினை மருத்துவரகள் வழங்கி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here