கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கொரநாட்டுக் கருப்பூரில் அதிமுக ஒன்றியம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கொரநாட்டுக்கருப்பூர் கடை வீதியில் அதிமுக ஒன்றிய சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்பொதுக்கூட்டத்தில் மாநகர செயலாளர் ராம ராமநாதன், பகுதி செயலாளர்கள் ராஜி, பத்ம. குமரேசன், அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் ஏவிகே அசோக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் அழகு.த சின்னையன்,ஒன்றிய செயலாளர் பகவதி, மாநகர செயலாளர் ஆயூப்கான், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் குழந்தைவேல், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் முத்துக்கிருஷ்ணன், முன்னாள் மத்திய சங்க செயலாளர் சக்திவேல், தகவல் தொழில்நுட்ப மண்டல செயலாளர் அறிவொளி, மண்டல துணைச் செயலாளர் பாலாஜி, மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதா ஸ்ரீதர், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜஹாங்கிர், சோழபுரம் பேரூர் செயலாளர் ஆசாத் அலி, சுவாமிமலை பேரூர் செயலாளர் ரெங்கராஜன், தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை செல்வம், பழக்கடை மூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பங்கற்று சிறப்புரை நிகழ்த்திய மாவட்ட செயலாளர் பாரதிமோகன் பேசுகையில் அதிமுக ஆட்சி காலம் என்பது மக்களின் பொற்கால ஆட்சியாக இருந்தது. இந்த அரசு மாணவர்கள், பெண்கள் மீது அக்கறை கிடையாது. திருமண உதவித் தொகையான தாலிக்கு தங்கம் நிறுத்தி விட்டனர். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட லேப்-டாப் நிறுத்தப்பட்டது. விவசாயிகளில் வாழ்வாதாரமாக இருந்த, குடிமராமத்து பணிகள் நிறுத்தப்பட்டது. அதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த, ஸ்கூட்டி திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த ஆட்சியில் விலைவாசி உயர்வு, வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டண உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற திமுக, இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எனவும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர் எனவும் அப்போது திமுக மீது குற்றம் சாட்டினார்.
மேலும் 2026-ல் அதிமுக ஆட்சி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அமைக்கப்படும். அதற்கு முன்னோட்டம்தான் எதிர் வரும் மக்களவைத் தேர்தல் என்று தெரிவித்தார்.