திருவள்ளூர், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சரின் பிறந்தநாளை வெகுச்சிற்பாபக கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனந்தேரி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனா பென்சில் புத்தகப் பை மற்றும் அறுசுவை விருந்து பிரியாணி வழங்கும் விழா பூண்டி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் டி கே சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சிவையா பூண்டி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் சித்ரா பாபு பூண்டி கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுரேஷ் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் சாந்தகுமார் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன் கழக முன்னோடி ஹரிஹரன் ஆலப்பாக்கம் வேலு பூண்டி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் பூண்டி கிழக்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மோகன கிருஷ்ணன் ஆனந்தேரி ஊராட்சி நிர்வாகிகள் ராமன் ராமு ஏழுமலை தயாளன் சுப்பிரமணி ,கச்சூர்இளைஞர் அணி ரஞ்சித் மற்றும் பள்ளிமேலாண்மை குழுதலைவர் மீனா உள்ளிட்ட திமுக கட்சியான் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.






















