தஞ்சாவூர்,மார்ச்.04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ரயில் நிலையம் முன்பு அதிமுக மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுப்பட்டனர்.
இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினார்கள்.




















