திருவள்ளூர், மே . 03 –
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிருவாகம் மற்றும் சுற்றுலத்துறை சார்பாக பூண்டி அணைக்குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வுஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சதுரங்கப்பேட்டை வரையிலான மிதிவண்டி பேரணி நடத்தப்பட்டது.
அப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து அவர்களோடு மிதிவண்டியில் பயணம் செய்து பொதுமக்களிடையே பூண்டி அணைக்குறித்து பிரச்சாரத்தை கடந்த மே 1 ல் மேற்கொண்டார்.
பொதுமக்கள் மற்றும் மாணாக்கர்களிடேயே பூண்டி அணைப்பகுதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிருவாகம் மற்றும் சுற்றுலத்துறை இணைந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து புறப்பட்ட மிதிவண்டி பேரணி பூண்டி அணை நோக்கி சென்று, பூண்டி அணையின் பக்கவாட்டு சாலை வழியாக சதுரங்கப்பேட்டை வரை சென்றது.
இம்மிதிவண்டி பேரணியில் மாவட்ட ஆட்சித்தலைவரும் கலந்துக் கொண்டு, மிதிவண்டியை இயக்கி பொதுமக்களிடையே பூண்டி அணைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இப்பேரணியில் திருவள்ளூர் டிரக்கர்ஸ் சைக்கிளிங்க் சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இம்மிதி வண்டி பேரணியில், மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜி.சிவக்குமார், பூண்டி நீர்தேக்க உதவிப்பொறியாளர் ரமேஷ், திருவள்ளூர் டிரக்கர்ஸ் சைக்கிளிங்க் சங்க நிர்வாகிகள் லோகேஷ்ராஜா, ராகுல் சர்மா, உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
























