திருவள்ளர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்கு சேகரிப்பில் மிகுந்த உற்சாகத்துடன் ஈடுப்பட்டார். அப்போது அவர் இத்தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவேன் எனவும் மேலும் இத்தொகுதியினை வளரச்சித் திட்டங்களின் மூலமாக வளம் பெற செய்வேன் என அப்போது அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதியளித்தார்.
பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் 24 ஊராட்சிகள் அடங்கிய 12 இடங்களில் பிரச்சாரம் செய்வதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
முன்னதாக அப்பிரச்சாரம் மணலி புதுநகரில் துவங்கி வெள்ளிவாயல்சாவடி, கொண்டகரை, அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர் பேரூராட்சி, நெய்த வாயல், திருவெள்ளைவாயல், நாலூர், மேட்டுப்பாளையம், வேண்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் தனது பிரச்சாரத்தை சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகுந்த உற்சாகத்துடன் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
அப் பிரச்சாரத்தின் போது உரை நிகழ்த்திய அவர் இப்பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் மேம்பாட்டிற்காக வேலைவாய்பு ஏற்படுத்திடும் வகையில் பாடுபடுவேன் எனவும், மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியின் நாட்களை 150 நாளாக உயர்த்துவதற்காக பாடுபடுவேன் எனவும் பேசினார்.
மேலும் தனக்கு கை சின்னத்தில் வாக்களித்தால் தமிழகத்திலேயே திருவள்ளூர் மாவட்டத்தை வளர்ச்சியில் சிறப்பு மிக்க மாவட்டமாக உயர்த்துவேன் என அப்போது வாக்குறுதியளித்தார்.
அப் பிரச்சாரத்தின் போது அவருடன் திருவள்ளூர் காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக ஊராட்சி மற்றும் கிளைக் கழக செயலாளர்கள் என திரளானவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
மேலும் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு சென்ற இடம் எல்லாம் அக்கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொது மக்கள் என அனைவரும் சிறப்பான வரவேற்புகளை வழங்கினார்கள்.























