தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், சித்திரைக்குடி எனும் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் புதையுண்டு காணப்படும் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த நந்தி மற்றும் தலை இல்லாத விஷ்ணு கற்சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தஞ்சையில் இருந்து 18 வது கிமீ தூரத்தில் உள்ள கிராமம் சித்திரக்குடி இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவிலை ஒட்டி பேராசிரியர் சத்யா என்பவரது வயல் உள்ளது. அவரது வயலில் நந்தி சிலை புதைந்து இருப்பதாக தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றி வரும் வரலாற்று ஆய்வாளர் மணிமாறனிடம் தெரிவித்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வரலாற்று ஆய்வாளர் மணிமாறன் தனது குழுவினருடன் சென்று அந்த பகுதியை ஆய்வு மேற்கொண்டார். பேராசிரியர் சத்யா வயலில் புதையுண்டு இருந்த முகம் சிதைந்த நந்தி கல் சிலையையும், வயலில் இருந்து 300 அடி தூரத்தில் உள்ள ஆனந்த காவிரி வாய்க்காலில் புதைந்து இருந்த தலை இல்லாத விஷ்ணு கல் சிலையையும் ஆய்வு செய்தனர்.
Byte
இந்த பகுதி பல்லவர் காலத்தில் சிறப்புமிக்க பகுதியாக விளங்கி இருக்கிறது ஏரியூர் நாட்டு என்ற கல்வெட்டு குறிப்பில் இந்த தகவல் கிடைத்ததாக வரலாற்று ஆய்வாளர் மணிமாறன் தெரிவித்தார்.
நந்தி மற்றும் விஷ்ணு கல் சிலைகள் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவையாக தெரிகிறது என்றார். இந்த பகுதியில் சிலைகள் புதையுண்டு இருக்க வாய்ப்பு உள்ளது. முழுமையாக இந்த பகுதியை கள ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.