தஞ்சாவூர், மே. 08 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தேவையான நேரத்தில் தேவைகளை அறிந்து சேவை செய்வது என்பதை மட்டும்கருத்தில் கொண்டு சேவையாற்றி வரும் சமூக ஆர்வலர் சிவா பட்டுக்கோட்டையில் இன்று முதல் கோடை காலம் முழுவதும் தினமும் 1 ரூபாய்க்கு தரமான, சுவையான தர்பூசணி ஜூஸ் – நாள் ஒன்றுக்கு 1,000 பேருக்கு வழங்குவதெனதிட்டமிட்டு அம் மக்கள் சேவையை தொடங்கிவுள்ளார் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கடந்த காலங்களை விட மிக அதிக அளவில் தமிழகத்தை கோடை வெப்பம் வாட்டி வதைக்கிறது. இந்த வெப்பத்திலிருந்து. பொதுமக்களின் தாகத்தை தனித்திட ஒரு சிறிய முயற்சியாக தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் சமூக ஆர்வலர் இளைஞர் சிவா என்பவர் இன்று முதல் தரமான, சுவையான தர்பூசணி ஜூஸ் 1 ரூபாய்க்கு வழங்கி வருகிறார். நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு வழங்க முடிவு செய்து இன்று முதல் தரமான, சுவையான தர்பூசணி ஜூஸ் ஒரு ரூபாய்க்கு வழங்கி வருகிறார். பட்டுக்கோட்டை அரிசிக்காரத்தெருவில் நடந்த விழாவை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, தாசில்தார் சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு 1 ரூபாய்க்கு தர்பூசணி ஜூஸ் வழங்கி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர். இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று 1 ரூபாய்க்கு தர்பூசணி ஜூஸை வாங்கி அருந்திச் செல்கின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் இளைஞர் சிவா கூறுகையில், தேவையான நேரத்தில் தேவையானதை வழங்குவதே எங்கள் சேவை என்பதை முன்னிறுத்தி இன்று முதல் 1 ரூபாய்க்கு கோடை காலம் முடியும் வரை அதாவது மே மாதம் தற்போது தொடங்கி மே, ஜூன், ஜூலை என 3 மாதங்கள் 100 நாட்கள் தர்பூசணி ஜூஸ் வழங்க உள்ளேன்.

ஒட்டுமொத்த டெல்டா மாவட்டத்தை புரட்டிப் போட்ட கஜா புயலாக இருக்கட்டும், அதனை தொடர்ந்து வந்த கொரோனா கால கட்டமாக இருந்தாலும் எங்களால் முடிந்த உதவிகளை பொதுமக்களுக்கு செய்துள்ளோம். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் காலை உணவு இலவசமாகவும், மதியம் சாப்பாடு ஐந்து ரூபாய்க்கும் தொடர்ந்து வழங்கினோம். தற்போது இந்த கோடைகால வெயிலை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு 1 ரூபாய்க்கு தர்பூசணி ஜூஸ் நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு 100 நாட்களுக்கு வழங்க உள்ளோம் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பேட்டி. ஜி.டி.சிவா – சமூக ஆர்வலர், பட்டுக்கோட்டை

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here