தஞ்சாவூர், பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை  செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திருவையாறு மேற்கு தில்லை ஸ்தானம் பெரும் புலியூர் உள்ளிட்ட பகுதியில் 100 ஏக்கரில் பூச்சி நோய் தாக்கி சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதி விவசாயிகள் பெருத்த வேதனையில் உள்ளனர்.

மேலும் இப்பாதிப்புக் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஏக்கர் இழப்பீடு வழங்கிட வேண்டுமென அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தண்ணீர் மற்றும் மழை பெய்ய பொய்த்த நிலையிலும் கடினமான தங்கள் சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் தலா ஏக்கர் ஒன்றுக்கு ரூ 40 ஆயிரம் வரை செலவு செய்துவுள்ளதாகவும் தெரிவிக்கும் விவசாயிகள் தற்போது தாங்கள் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதரம் பாதிக்கும் நிலையில் உள்ளோர் எனவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந் நோய் தாக்குதல் குறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் அவர்கள் துறை சார்பில் எடுக்கவில்லை என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் தங்களை அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சேதம் ஏற்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்களை பூச்சி நோய் தாக்கி வரும் பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் பூச்சி நோய் பரவாமல் தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மாவட்ட வேளான் துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here