கும்பகோணம், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிலாச்சேரி அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் 2050 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை முன்னாள் நீதியரசர் வழங்கினார்.
கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி வளாக உள்ளரங்கில், அன்னை கல்வி குழுமம் தலைவர் அன்வர் கபீர் தலைமையில் நடைபெற்றது.
அதில் துணை தலைவர் மருத்துவர் எகியாநயீம், குழம தாளாளர் அப்துல் கபூர், தலைமை நிர்வாக அலுவலர் ராஜ்குமார், இயக்குநர் ரவி, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை அலுவலர் ஆனந்த், துணை முதல்வர் லொயோலாபீரிஸ், பேராசிரியர்கள் இளஞ்செழியன், ராஜா, மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ராஜேஸ்வரன், கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க வேண்டும். சமூகத்திற்குகாக பாடுபட வேண்டும். உயரிய எண்ணத்தோடும் சிந்தனையோடு வாழ்வில் உயர வேண்டும். என்று அறிவுறுத்தினார்.
பின்னர் தொடர்ந்து 2018, 2019, 2020 ஆம் கல்வியாண்டில் பயின்ற இளங்கலை, இளம் அறிவியல் மற்றும் முதுகலை படித்த 2050 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.






















