கும்பகோணம், மார்ச். 13 –

கும்பகோணத்தில் உள்ள வீர சைவ மடத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அர்ஜுன் சம்பத் கும்பகோணம் மாநகரம் கோவில்கள் நிறைந்த நகரம் கும்பகோணம் அதனை சுற்றியுள்ள திருவிடைமருதூர் திருபுவனம் திருநாகேஸ்வரம் பகுதியில் உள்ள கோவில்களை சுற்றிலும் மதுக்கடைகள் மாட்டு இறைச்சி பிரியாணி கடைகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்படுகிறது.

அதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதனை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பாக ஆடுதுறையில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் அங்கு வெற்றி பெற்றுள்ள வார்டு உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்றும் உக்ரேன் நாட்டில் தவிர்த்து வந்த மாணவர்களை பத்திரமாக மத்திய அரசு மீட்டுள்ளது.

இதிலும் தமிழக அரசு அரசியல் செய்வது நல்லதல்ல என்றும் இலங்கை போன்ற வெளிநாடுகளில் பாதிக்கப்படும் நமது  மீனவர்களை  வெளியுறவுத் துறை மூலமாக மட்டுமே மீட்க முடியும் இதில் அரசியல் செய்யாமல் தமிழக முதல்வர் மத்திய அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகதாது புதிய அணை கட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கர்நாடகத்தில் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. அதனை தடுக்க தமிழக முதல்வர் குரல் கொடுக்காத நிலையில் அதே போன்று முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில் அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கிற திமுகவால் ஒருபோதும் இதில் வெற்றி பெற முடியாது. என்றும்,

மத்திய பாஜக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஒரு போதும் அனுமதிக்காது என்றும். ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கு தலித்துகளுக்கு கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என்று கூறப்பட்ட பாஜக அனைத்து பொய்ப் பிரச்சாரங்களையும் தவிடு பொடியாக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. என்றும், விரைவில் தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here