காஞ்சிபுரம், மார்ச். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

காஞ்சிபுரம் மாவட்டம், ஜயங்கர் குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இவ்வாண்டு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகின்றது. அதனைத்தொடர்ந்து அப்பள்ளியில் இன்று சேர வந்த குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்தும் தலையில் மலர் கிரீடம் சூடியும் மேலும் நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து சேர்த்தனர். அத் தடபுலான வரவேற்பை கண்டு அக்கிராமத்தினர் வியப்புடன் கூடிய மகிழ்ச்சியில் மூழ்கினர்.

தமிழகத்தில் உள்ள அரசுப்  பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக அத்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. அதனால் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் உயர்கல்வியில் இடஒதுக்கீடு,  உதவித்தொகை ஆகியவை வழங்கப் படுகிறது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

மேலும் அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மேலும் 5 வயது நிரம்பிய குழந்தைகளை அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சேர்க்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஐயங்கார்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில், பள்ளி கல்லூரி துறை சார்பில் மாணவர் சேர்க்கை இன்று நடைபெற்றது.

அப்போது, 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பூ மாலை அணிவித்து, தலையில் மலர் கிரீடம் சூடியும், நாதஸ்வர மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க அக்குழந்தைகளை ஊர்வலமாக அழைத்து  வந்து பள்ளியில் இவ்வாண்டிற்கான குழந்தை சேர்க்கை நிகழ்ச்சி மிகுந்த தடபுடலாகவும் ஊரார் பிரமிக்கும் படியும் மிகச் சாறப்பாக நடைபெற்றது.

மேலும் புதியதாக சேர்க்கைக்கு வந்த குழந்தைகளுக்கு புத்தகங்களும் கரும் பலகைகளும் வழங்கினார்கள். மேலும்  மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி புதிதாக சேர்ந்துள்ள குழந்தைகளிடம் திருக்குறள் மற்றும் பள்ளி பாடல்கள் பாடி மகிழ்வித்தனர். பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்து கூறி சிறந்த மாணாக்கர்களாக திகழ வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here