ஆர்.கே.பேட்டை, நவ. 16 –
ஆர்.கே.பேட்டையில் கடந்த நவ 14 -2021 அன்று ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் குரு எலும்பு, மூட்டு & பிஸிநோதெரபி கிளினிக் இணைந்து நடத்திய இலவச எலும்பு, மூட்டு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
ஆர்.கே.பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 முதல் பகல் 1 மணிவரை நடைப்பெற்ற இந்த மருத்து வமுகாமில், மூட்டு வலி, மூட்டு தேய்மானம், மூட்டு வீக்கம், இடுப்பு வலி, முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முழங்கால் வலி, மணிக்கட்டு வலி, குதிகால் வலி, கை,கால் குடைச்சல், விளையாட்டு காயங்கள், தசைப்பிடிப்பு, சுளுக்கு, நரம்பு வலி, மற்றும் பொது மருத்துவங்கள் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இம் முகாமில் ஆர்த்தோ ஆலோசகரும் ஜாயிண்ட் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவருமான பி.கே.பாலாஜி தலைமையிலான மருத்துவக் குழுவில் இடம் பெற்ற மரு.எம்.பாபு, மரு.எஸ்.கே.பாலகிருஷ்ணன், மரு.கே.ஏ.தண்டபாணி, மரு.கே.வி.ஆறுமுகம், மருத்துவர் எம்.வி.சிவக்குமார் மற்றும் எஸ்.டி.சங்கரன் ஆகிய எட்டு மருத்துவர்கள் கொண்ட குழு இம்முகாமிற்கு இலவச சிகிச்சைக்கு வருகைப் புரிந்த நூற்றுக்கணக்கான மருத்துவ பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
தீவிர எலும்பு பாதிப்புக்கு உண்டானவர்களுக்கு 50 சதவீத சலுகைக் கட்டணத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரேயை ஆர்.கே.பேட்டையில் இயங்கி வரும் குரு எலும்பு, மூட்டு & பிஸியோதெரபி கிளினிக் மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கினர்.
இந் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக லயன்.வி.ஆர்.தெய்வசிகாமணி, லயன். எம்.வி.ராஜேந்திரன் மற்றும் லயன். எம்.வி.சுந்தரராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்து இந் நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள். இம்முகாமில் உள்ளூர் மற்றும் வெளியூர் கிராம மக்கள் பங்கேற்று இலவச சிகிச்சைப் பெற்று பலன் பெற்றனர்.