பெரியபாளையம், பிப். 17 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில்  சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது.

மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகள் மட்டுமல்லாது மாவட்டம் தாண்டி வெளி மாவட்டம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அத்திருக் கோயிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அத்திருந்தலம் சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது.

குறிப்பாக ஆடிமாதத்தில் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி மாதம் முதல் வாரம் தொடங்கி 14 வாரங்கள் பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம் விழா கோலமாக காட்சித் தருவது அதனைக் காண்பதற்கு இருக் கண்கள் பத்தாது என்றே சொல்லலாம். அதன் பொருட்டு அங்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக இந்து சமய அற நிலையத் துறைக்கும் அரசுக்கும் பல்வேறு தரப்பினர்கள் வெகு நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அக்கோரிக்கைகளின் அடிப்படையில், பெரியபாளையம் பவானி அம்மன் ஆலய பக்தர்கள் உள்ளிட்ட அவ்வாலய நிர்வாகத்திற்காகவும் சுமார் ரூ. 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆரம்பக் கட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் திருப்பணிகளுக்கு அமைச்சர் காந்தி, கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி, அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here