செங்கல்பட்டு, ஏப். 03 –

தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெற்று வருகிறது. மேலும் இன்னும் ஒருசில நாட்களில் + 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், அத்தேர்வினை எதிர்கொள்ளும் அம்மாணவர்கள் தேர்வு பற்றிய பதற்றம் இல்லாமல் இருக்கவும், மேலும் பாடங்களை மனம் ஒன்றிப் படிக்கவும், அத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று  அவர்கள் விரும்பிய மேற்படிப்பில் சேரவும் செங்கல்பட்டு அடுத்த செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோகஹயக்ரீவர், கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதி, பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் கோயில்களில் மாணவர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் இச்சிறப்பு பூஜையில் மாணவர்களின் நட்சத்திரம் உள்ளிட்ட விவரங்கள் பெறபெறப்பட்டு மேற்கண்ட மூன்று கோயில்களிலும் சங்கல்பம் செய்து கொள்ளப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும், செட்டிபுண்ணியத்தில் அருள்பாலித்து வரும் அருள்மிகு யோக ஹயக்ரீவர், சுவாமி தேசிகனுக்கு பிரத்யட்சமாகி, சகல கலைகளிலும் மேன்மையடையச் செய்தார் எனத் திருத்தல வரலாறு தெரிவிக்கிறது. மேலும் இத்திருத்தலத்தில் மூலவராக வரதராஜ பெருமாளும், உற்சவராக யோக ஹயக்ரீவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

மேலும், இத்திருத்தலத்தில், யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியில் நல்ல முறையில் தேர்ச்சி பெறலாம் எனவும் ஐதீகமாக இத்திருத்தலத்தில் இருந்து வருகிறது.

மேலும் இத்திருக்கோயிலில் நடைப்பெற்ற இச்சிறப்புப் பூஜையிலும், பிரார்த்தனையிலும் பங்கேற்பதற்காக தங்கள் பிள்ளைகளுடன் பொற்றோர்கள் திரண்டு வந்திருந்ததாலும் மேலும் விடுமுறை தினம் என்பதால் பக்தர்களின் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது இதனால் இத்திருத்தலத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மேலும், சன்னதியில் உள்ள ஹயக்ரீவர் சுவாமிக்கு ஏலக்காய் மாலை, துளசி மாலை சாத்தி, மாணவர்களின் பெயர், நட்சத்திரம் சங்கல்பம் செய்துகொள்ளப்பட்டதுடன், சுவாமியின் திருவடிகளில் வைத்து அர்ச்சனை செய்யப்பட்டு அவர்களுக்கு தரப்பட்டது.

மேலும்,  ஹயக்ரீவர் வழிபாட்டு ஸ்தோத்திரங்களுடன் விசேஷ ஆராதனையும் நடைபெற்றது. மேலும் இம்மகா ஆராதனையை கண்டு அம்மாணவர்கள் உளம் சிலிர்த்து சுவாமி தரிசித்து செய்து மகிழ்ந்தனர்.

மேலும் இச்சிறப்புப் பூஜையில் பங்குப்பெற அருள்மிகு யோக ஹயக்ரீவர் திருக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனது பொற்றோர்களுடன் வந்த மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து சென்றனர்.

 

பேட்டிகள்

  1. ரமணா நாகப்பட்டினம்
  2. சாய் நந்தினி செங்கல்பட்டு

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here