சென்னை:

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. இடம் பெற்றுள்ளது. தே.மு.தி.க.வும் இடம் பெறும் என்று அமைச்சர்களும், பா.ஜனதாவினரும் கூறி வருகிறார்கள்.

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். த.மா.கா. தங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது.

த.மா.கா.வுக்கு ஒரு இடம் தருவதாகவும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தரப்பில் வற்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க.வை இழுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அ.தி.மு.க. கூட்டணிக்கு அந்த கட்சி வந்தால் அதற்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும். இந்த கூட்டணி முடிவானால் த.மா.கா.வுக்கு ஒரு தொகுதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறாவிட்டால் த.மா.கா.வுக்கு 2 தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இன்னும் 2 நாளில் இதுபற்றி முடிவு செய்யப்பட்டு விடும் என்று த.மா.கா. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here