குத்தாலம், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்கில் கம்பர் கழகம் இரண்டாம் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதி செம்மல் உரையரசி வைஜெயந்தி இராஜன் ஆகிழோர் பங்கேற்று கம்பர் கண்ட ஒருமைப்பாடு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
முன்னதாக நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் மீனாட்சி சுந்தரம் புறங்கையால் ஒரு நிமிடத்தில் 100 தண்டால் எடுத்து காண்போரை வியப்பில் ஆழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து, மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி அமுதயாழினி பாரதிதாசன் கவிதையை ஒப்புவித்தார். இனிதாக நடைப்பெற்ற அவ்விழாவில் திரளான கம்பர் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று விழாவினை மேலும் சிறப்படையச் செய்தனர்.





















