முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால்  வெற்றி உறுதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஹெட்சி லிமா அமாலினி பேச்சு


ராமநாதபுரம், செப். 3- வாழ்க்கையில் முயற்சியை கைவிடாமல் நம்பிக்கையுடன் செயல்பட்டால் எல்லாம் நம்மால் முடியும்” என, ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமையின் திட்ட அலுவலர் ஹெட்சி லிமா அமாலினி சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் 3ம் ஆண்டு விழாவில் தலைமை உரையாற்றி பேசினார்.
தூத்துக்குடியை தலைமை யிடமாக கொண்டு செயல் படும் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் ராமநாதபுரம் கிளையின் 3ம் ஆண்டு விழா நடந்தது. விழாவில் ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஹெட்சி லிமா அமாலினி தலைமை வகித்து பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களும் வேலைக்கு செல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளது பாராட்டுக்குரியது. ஆண்களுக்கு தோல் கொடுக்கும் வகையில் பெண்கள் வேலைக்கு வருகிறோம். இங்கு பயிலும் மாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் அரசு துறை தேர்வு எழுதும் போது அச்ச மின்றி தன்னம்பிக் கையுடன் எழுதினால் நீங்களும் சாதிக்கலாம். ஒவ்வொரு மாணவ மாணவிகளும் முயற்சி யையும், தன்னம்பிக் கையையும் கைவிடக் கூடாது. கண்டிப்பாக பிரசர் இருக்க கூடாது அதாவது மனஉளச்சல் ஏற்பட்டு என்னால் எப்படி முடியும் என சோர்வடையக் கூடாது. அரசு தேர்வு 2 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதில் நமக்கு எங்கு கிடைக்க போகிறது என்ற அச்ச உணர்வு இருக்கவே கூடாது. நெகடிவ் சிந்தனையை துாக்கி எரிந்துவிட்டு பாசிடிவ் சிந்தனையுடன் முயற்சித்தால் எல்லாம் வெற்றியே. குறிப்பாக நேர்முக தேர்வுக்கு செல்லும் போது மரியாதையை கற்றுக்கொண்டு செல்லுங்கள். வயதில் மூத்தவர்களை வணங்க வேண்டும். பணியில் சேரும் ஒவ்வொரு வருக்கும் பொறுப்புணர்ச்சி அவசியம் தேவை. நமது கடமை என்ன என்பதை தெரிந்து செயல்பட வேண்டும். மற்றவர்கள் குறையை மட்டும் பேசுபவர்கள் பின்னோக்கிதான் செல்வர். நம் குறையை கண்டறிந்து மாற்றிக் கொண்டு சென்றால் ஒரு படி மேலே செல்வோம். தன்னம்பிக்கையை இழந்து விடாமல் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியமே. இவ்வாறு பேசினார். முன்னதாக சுரேஷ் அகாடமியின் நிறுவனர் சுகேஷ் சாமுவேல் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். விந்தியா சுகேஷ், காவல்துறை டி.எஸ்.பி. ராமசந்திரன், தூத்துக்குடி கருவூலம் துணை கண் காணிப்பாளர் கனிமுருகன்,  கைரேகை பிரிவு டி.எஸ்.பி., யூசப், சப்இன்ஸ்பெக்டர் சரவண பாண்டியன், சுதாகர், வருமானவரிதுறை  சஞ்ஜீவ் கனி, வி.ஏ.ஓ. தட்சிணாமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் கோபிநாத், ஆடிட்டர் சுந்தரபாண்டியன், கூட்டுறவு சார்பதிவாளர் மகேஷ்வரி, ஸ்டேட் வங்கி வெங்கடேஸ்வரி உட்பட பலர் பேசினர். ராமநாதபுரம்  கிளை பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நன்றி கூறினார். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here