pic file copy :

திருவள்ளூர் செப் 23 : 

திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கால்வாய்களில் மழைநீர் தேங்கி கொசு, புழுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என பொது மக்கள் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ., வி.ஜி ராஜேந்திரனிடம் தொடர்ந்து புகார் அளித்தனர்.

இந்நிலையில்  திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட  பகுதிகளுக்கு  வி.ஜி ராஜேந்திரன் எம்.எல்.ஏ நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நகராட்சி பணியாளர்கள் மூலம் கால்வாய் தூர்வாரும் பணியை துரிதப்படுத்தினார்.

அவருடன் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம்,தி.மு.க திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன், கஞ்சிப்பாடி சரவணன் உட்பட கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here