காஞ்சிபுரம், டிச. 11 –
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே ஆலடி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளனர்
புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட் பகுதியில் ஆலடி தெருவை சேர்ந்த ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த விஷ்ணு காஞ்சி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.