பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப் ஹாப்’ ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நட்பே துணை’. அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்துள்ளார்.

இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் இயக்குநர் சுந்தர்.சியும் கலந்து கொண்டார். சுந்தர்.சி பேசியதாவது:-

இப்படத்துக்காக அனைவருமே உழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் இயக்கும் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை. என் படங்களில் பொழுது போக்கை மட்டுமே எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் ‘அன்பே சிவம்‘ மாதிரி ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள். ‘நட்பே துணை’ கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் கடந்து நல்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தது. மீசையை முறுக்கு போலவே இந்த படமும் பெரிய வெற்றி பெறும்’. இவ்வாறு அவர் பேசினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here