திருவாரூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், 12 மகா மகத்திற்கு நிகரானதாக கருதப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர தீர்த்தவாரி ஆலய திருக்குளமான கமலாலயத் திருக்குளத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம் சைவ சமய குறவர்களால் பாடல்பெற்ற ஆலயம். இவ்வாலயத்தின் வருடாந்திர பங்குனி உற்சவ பெருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் சிறப்பு நிகழ்வான பங்குனி உத்திர தீர்த்தவாரி குளங்களில் ஆலயம் என அழைக்கப்படும் ஒரே திருக்குளமும், 64 தீர்த்த ஸ்தான கட்டங்களை உள்ளடங்கிய திருவாரூர் கமலாலயத ;திருக்குளத்தின் தேவர்கள் தீர்த்தமாடிய ஸ்தான கட்டத்தில் இன்று நடைபெற்றது. ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் நடைபெற கூடிய இத்தகைய தீர்த்தவாரி என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறக் கூடிய மகாமக தீர்த்தவாரிக்கு நிகரானதாக போற்றப்படுகிறது.
பல்வேறு சிறப்புகளைக்கொண்ட பங்குனி உத்திர தீர்த்தவாரியையொட்டி ஆலத்தில் இருந்து தீர்த்தவாரி உற்சவரான ஸ்ரீஅஷ்ரதேவர் சுவாமி ஆலயத்தில் இருந்து கமலாயத்திருக்குளத்தின் தேவர்கள் தீர்த்தமாடிய ஸ்தான கட்டத்திற்கு எழுந்தருள அங்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீஅஷ்ரதேவ சுவாமியை சிவாச்சாரியார்கள் கையில் ஏந்தி சிம்ம லக்னத்தில் கமலாலயதீர்த்த குளத்தில் புனித நீராட அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் புனித நீராடினர். அப்போது திரளான பக்தர்களுக்கு ஸ்ரீசந்திரசேகர சுவாமி காட்சியளித்தார்.
இதனை தொடர்ந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசுந்திரசேகரர், ஸ்ரீஅம்பாள், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஆழத்தேரோடும் ஆலய நான்கு ராஜரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.























