கும்பகோணம், அக். 03 –
கும்பகோணம் அருகே ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்கொரு விருச்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி நாகக்குளம் பகுதியில் நடைப்பெற்ற இத் துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக அரசு தலைமை கொறடா கோவி செழியன், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இந்தியாவில் 33 சதவீதம் வனப்பகுதி நிறைந்த இடமாக உள்ளது அதிலும் தமிழகம் 23 சதவீதம் வனப்பகுதி நிறைந்ததாகவும் தஞ்சை மாவட்டத்தில் 3% மட்டுமே வனப்பகுதி நிறைந்த பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும், அப்போது அவர் தெரிவித்தார் மேலும், அதனைக் கருத்தில் கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு அதனை முறையாக பராமரிக்கும் வகையில் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வீட்டுக்கொரு விருட்சம் எனும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர் இத்திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்களில் செயல் படுத்த உள்ள நிலையில் அதன் முதல் பேரூராட்சியாக ஆடுதுறை பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டு 501 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இப்பேரூராட்சியில் தொடங்கப்பட்டுள்ளதாக பெருமிதம் கொண்டார்.
தொடர்ந்து மருத்துவக்குடி, நாகக்குளம் வட்டாரத்தைச் சுற்றி 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. பசுமையை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கிணங்க வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம் ஆடுதுறை பேரூராட்சி மருத்துவக்குடி பகுதியில் அனைவரிடம்மும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





















