சோழவரம் அடுத்த பாடியநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் அதை இடத்தில் உடல் நசுங்கி பலி, பள்ளி மாணவி ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சோழவரம், அக். 11 –
முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பள்ளி மாணவி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியான விபத்து சோழவரம் அடுத்த காரனோடை ஐயப்பன்சத்திரம் என்ற இடத்தில் கல்கத்தா நெடுஞ்சாலையில் நடந்துவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் குமார் இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவர் 11ம் வகுப்பு படிக்கிறார் இளைய மகள் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவர்கள் இருவரும் பொன்னேரி அடுத்த தச்சூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்கள்.
இன்று இவர்கள் இருவரையும், பள்ளியில் விடுவதற்காக அவரது மாமா நாகராஜ் (வயது35 ) என்பவர் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். போகும் வழியில் சோழவரம் அடுத்த காரனோடை ஜனப்பன்சத்திரம் கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, முன்னாள் சரக்கு ஏற்றிச் சென்ற லாரிக்கு பின்னால் கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. அதன் விளைவாக காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கிக் கொண்டது.
இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜ் , குமாரின் மூத்தமகள் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியும் உயிரிழந்தனர் 9 ஆம் வகுப்பு படிக்கும் குமாரின் இளைய மகள் படுகாயமடைந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போக்குவரத்து போலீசார் தீயணைப்பு மீட்பு துறை காவலர்களுக்கு விபத்துக்குறித்து தகவல் தெரிவக்கப்பட்டு, மீட்பு குழுவினர், கிரேன் மூலம் லாரிக்கு பின்னால் மோதி நொறுங்கிய காரில் இருந்து மூவரையும் மீட்டனர். அவ் விபத்தில் கார் ஓட்டி வந்த நாகராஜ் என்பவரும், 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியும், சம்பவ இடத்திலயே பலியானது தெரியவந்தது. மேலும் உடன் காரில் பயணித்த அவரது சகோதரி 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி படுகாயத்துடன் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இக் கோர விபத்து அப்பகுதி முழுக்க பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. மேலும் இச் சோக சம்பவத்தால் அவர்கள் இருவரும் படிக்கும் பள்ளியில் அனைவரிடத்திலும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.