தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகன் பாலமுருகன் என்ற மாற்றுத் திறனாளி இந்திய கால்பந்தாட்ட அணிக்கு தேர்வாகிவுள்ளார்.அதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் பாரட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
தேனி : ஜூன்,26-
தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த இராணி என்கிற கூலித் தொழிலாளியின் மகன் பிறவியிலயே ஒரு கை இல்லமால் பிறந்த மாற்றுத் திறனாளி ஆவார் இவர் தற்போது இந்திய கால்பந்தாட்ட அணிக்கு விளையாட தேர்வாகிவுள்ளார் .
சிறு வயதில் இருந்தே வறுமையில் வாழ்ந்த இவர் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டு திறன் பட விளையாடி வந்த நிலையில் தனது மீதான நம்பிக்கையாலும் , தாயார் மற்றும் உடன் நட்புக்கொண்ட நண்பர்களும் அளித்த உற்சாகத்தின் காரணமாக இந்த இளைஞர் மேலும் தனது திறமையை மேன்மைப் படுத்தி மாவட்ட அளவிலான அணியில் தேர்வாகி பின்பு மாநில அணியில் இடம் பெற்று கோவாவில் நடைப் பெற்ற போட்டியில் இவர் பங்கேற்ற அணி இரண்டாம் இடம் பிடித்தது .மேலும் நேபாளத்தில் நடைபெற்ற போட்டியில் விளையாடினர் தற்பொழுது ஜோர்Lன் நாட்டில் நடைப் பெறும் கால்பந்தாட்டப் போட்டியில் இந்திய அணியில் இட பெற்றுள்ள பாலமுருகனுக்கு அங்கு செல்வதற்கான செலவுகளை கூலி வேலை செய்து கடன் வாங்கி அனுப்ப வேண்டும். என்ற நிலையில் உள்ளதாக அவரது தாயார் கூறினார். வறுமை நிலையிலும் தனது மகனின் திறமையை உலகுக்கு வெளிப்படுத்த அவரது தாயாரும் தனது திறமையை வெளிப்படுத்த கடுமையான பயிற்சியில் ஈடுப் பட்டு வரும் மாற்றுத் திறனாளி பாலமுருகனுக்கு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி மக்களும் நண்பர்களும் இந்திய அணியில் இடம் பெற்று இந்தியாவுக்காக விளையாடப் போகும் அவருக்காக பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர் . மேலும் பாலமுருகனுக்கு தேனி மாவட்ட கலாம் நண்பர்கள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.