புதுச்சேரி, மார்ச். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்

புதுச்சேரி மாநில பாட்டாளி இளைஞர் சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் கவுண்டன் பாளையத்தில் உள்ள வன்னியர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.

அதில் இளைஞர் சங்க செயலாளர் (தெற்கு) சேதுபதி,  சா.சங்கீத்ரணியன்  இளைஞர் சங்க செயலாளர் (மேற்கு) பிரதீப் குமார் இளைஞர் சங்க செயலாளர் (கிழக்கு) ஹமச்சந்திரன் இளைஞர் சங்க செயலாளர் (வடக்கு) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பாட்டாளி இளைஞர் சங்க மாநில நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

மேலும் அக்கூட்டத்தில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டன தெரிவித்தும், மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிராக மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வது, மேலும் அரசு பணிகளில் வன்னியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தொகுதி வாரியாக இளைஞர் சங்க நிர்வாகிகள் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இளைஞர் சங்க நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்தில், மாநில துணை அமைப்பாளர்கள் வடிவேல் கவுண்டர் , துரை கவுண்டர், நரசிம்மன், சங்கர், புருஷோத்தமன் ஆகியோரும் கலந்துகொண்டு பட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின்  செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here