திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலை நேரத்தை 18 மணி நேர கட்டாய பணியை எட்டு மணி நேரமாக குறைத்திட வேண்டும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை திரும்ப பெறுவதை நிறுத்திட வேண்டும், மற்றும் 14 வது மாநில மாநாடு தீர்மானங்களை முன் வைத்து,மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மாநிலம் தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் கோபு தலைமை ஏற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் துரை கண்டன வுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயல் தலைவர் ஜீவா மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வேலன் நடராஜன் மணிமாறன் முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னிலையாக சுரேஷ் பாபு மண்டல தலைவர், அசோக்வடிவேல் மாவட்ட தலைவர், கிருஷ்ணமூர்த்தி மண்டல செயலாளர், ராஜகோபால் மாநில துணைத் தலைவர், கணேசன் மாவட்ட செயலாளர், குணசேகரன் மாவட்ட அமைப்பு செயலாளர். மேலும் மகிழ்ச்சியுரையை ஜெய்கணேஷ் மாவட்ட பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்திதனார்கள். தொடர்ந்து மாநில அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் நடைபெற்றது.