கும்கோணம், மே. 28 –
கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகில் சாதி ஆணவ படுகொலையைத் தடுக்க தனி சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கற்றன.
ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் தமிழக முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச்செயலாளர் சின்னை பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திராவிடர் கழகம் விடுதலை தமிழ் புலிகள் கட்சி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் நீலப்புலிகள் இயக்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திராவிடர் விடுதலைக் கழகம் இந்திய குடியரசு கட்சி மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி தலித் கிறிஸ்துவ நல சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் சார்பில் தமிழகத்தில் நடைபெறும் ஜாதி ஆணவக் படுக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச் சிறப்பு சட்டம் இயற்றக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் மண்டல செயலாளர் விவேகானந்தன் தொகுதி செயலாளர் முல்லைவளவன் கருத்தியல் பரப்புரை மாநில செயலாளர் அரசாங்கம் திராவிட கழக மாவட்ட தலைவர் நிம்மதி விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் இளைஞரணி மாநில துணைச் செயலாளர் விஜய்ஆனந்த் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் சசிகுமார் வழக்கறிஞர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்




















