திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
அப்போது அவர்கள் இன்சூரன்ஸ் தொகை நிலுவையில் உள்ளது அதை வழங்க வில்லை சென்ற மாதங்களில் சம்பா சாகுபடி மழையால் பாதிக்கப்பட்டு அதற்கான நிவாரண தொகையும் வழங்க வில்லை எனவே பல முறை போராட்டங்கள் செய்தும் எந்த பலனும் இல்லை இதற்கு மேலாவது உடனடியாக நிவாரண தொகையும் இன்சூரன்ஸ் தொகையும் போர்க் கால அடிப்படையில் வழங்கிட வேண்டும் என கோரிக்கை மற்றும் கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். அதனால் கூட்ட அரங்கில் அரைமணி நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அதனிடையே மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ யிடம் கோரிக்கை மனுக்களை விவசாயிகள் வழங்கினார்கள்.
பேட்டி:
சேதுராமன் விவசாய நல சங்கம் மாவட்ட தலைவர்