தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலால் மீனவர் ஒருவர் தலையில் காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டும் அதில் 9 பேர் தாக்குதலில் இருந்து தப்பித்தும் உள்ளனர்.

சென்னை, ஆக 4 –

கடந்த ஆகஸ்ட் 1 அன்று கோடியக்கரை கடற்பகுதியில் பதிவுச் செய்யப்பட்ட படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திவுள்ளனர். அதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் ஒன்பது பேர் இந்த தாக்குதலில் இருந்து தப்பித்துவுள்ளனர்,

இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அக்கடிதத்தில் இலங்கை அரசு சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல் மீனவர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பது கண்டனத்திற்கு உரியது என்றும் இத்தகையச்சூழலை நாம் கண் மூடிப் பார்க்கமுடியது என்றும் இதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்றும் கடுமையாக கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடுகையில் இந்தச் சம்பவம் தமிழ்நாட்டில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவுள்ளது என்றுக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நம் நாட்டு மீனவர்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களை கடைப்பிடிப்பதை உறுதி செய்வதும் நமது கடமையாகும் என்று கூறிவுள்ளார்.

எனவே இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறை நிகழ்த்தாமலும் அவர்களது வலைகளையும் படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்தி எழுதியுள்ளார்.

பல்லாயிரக்கனக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்றும் அதில் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here