திருவாரூர், மார்ச்.13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்

திருவாரூரில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் இன்றைய தினம் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகர அதிமுக சார்பாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து தபால் நிலையம் வரை கை கோர்த்தப்படி நின்றவாறு அவர்களின் போராட்டம் நடைபெற்றது.

அதுபோல் மாவட்டத்தில் உள்ள குடவாசல், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் மற்றும் பேரளம் ஆகிய பகுதிகளில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

அதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பங்கேற்று திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாப்பா.சுப்ரமணியன் தலைமையில் வடக்கு ஒன்றிய செயலாளர்  இராஜேந்திரன் திருவாரூர் நகர செயலாளர் ஆர்.டி.மூர்த்தி, திருவாரூர் ஒன்றிய செயலாளர்கள்  பி கே யு . மணிகண்டன், செந்தில்வேல்,  வலங்கைமான் ஒன்றிய செயலாளர் சங்கர் நன்னிலம் ஒன்றிய செயலாளர் அன்பு மற்றும் குணசேகரன் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் கலியபெருமாள், மாவட்ட தகவல் தொழில்நு ட்ப பிரிவு   செயலாளர் சின்னராஜ் மற்றும் பாப்பா பிரதாப்போத்தன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here