பூசாரி சிவா, ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் கருப்பன சாமி கோயிலில் அருவாள் மேல் நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.
ராமநாதபுரம், ஆக.9-
இராமநாதபுரம் அருகே கொட்டகை கிராமத்தில் அருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பதினாறு பிள்ளை காளியம்மன், ஸ்ரீ வரம் கொடுக்கும் கருப்பசுவாமி, ஸ்ரீ வனதுர்கா தேவி ஆலயத்தில் 10 ம் ஆண்டு ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆடி அமாவாசையன்று கோயில் வளாகத்தில் கோயில் பூசாரி அருள்வாக்கு சித்தர் எம்.பி.கே.சிவா முன்னிலையில் மகா சிறப்பு யாகம் நடைபெற்றது .வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க மங்கல இசையுடன் கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு, புனித நீர் அடங்கிய கலசங்கள் முன் வைக்கப்பட்டு, கணபதி ஹோமம் நிறைவு பெற்றவுடன், அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்று. வனதுர்க்கை அம்மன், பதினாறு பிள்ளை காளியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு, பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இப் பூஜைக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் திருமண தடை நீங்கவும், தொழில் அபிவிருத்தி, கல்வி, செல்வம் வேலைவாய்ப்பு, குழந்தை வரம், நோய் பல தடைகள் நீங்க கோயில் பூசாரி அருள்வாக்கு சித்தர் சிவா அருவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லி பக்தர்களின் கோரிக்கையை நிறை வேற்றி வருகிறார்.
முன்னதாக குதிரையின் மீது அமர்ந்து உள்ள கருப்பசாமிக்கு எலுமிச்சை பழங்களை நான்கு துண்டுகளாக வெட்டி இவற்றை நான்கு திசையிலும் எரிந்துவிட்டு அருள்வாக்கு சொல்லும் உடையில் பூசாரி சிவா அருவாள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொல்லுகிறார்.
மருத்துவ ரீதியாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஏற்கனவே இவ்வாலயத்திற்கு வருகை தந்து குணமான பக்தர்கள் அன்னதான பொருள்களான அரிசி, பலசரக்கு, காய்கறிகள், இலவசமாக வழங்கி கருப்பனசாமி அருள் பெற்றுச் செல்கின்றனர். ஆடி அமாவாசை விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.