திருவள்ளூர்:
ஓட்டுநர் காவலர்களின் பார்வை தரத்தை பேணவும், அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல்துறை வடக்கு மண்டல தலைவர் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் சரகம் காவல்துறை துணை தலைவர் வழிகாட்டுதலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பாக திருவள்ளூர் மாவட்ட ஓட்டுநர் காவலர்களுக்கு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையுடன் ஒருங்கிணைந்து நேற்று (23.02.2019) திருவள்ளூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. பொன்னி முன்னிலையில் சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
அதில் திருவள்ளூர் காவல் மாவட்டத்தைச் சார்ந்த 64 காவலர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர்,ஓட்டுநர் காவலர்களுக்கு வாகனம் ஓட்டும்போது பின்பற்ற வேண்டிய சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வகுப்பு எடுக்கப்பட்டது.