திருவள்ளூர், ஆக. 30 –
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயில் ஊராட்சி மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மன் ஆலயத்தின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
இத்திருவிழாவினை முன்னிட்டு சுபாகிருது வருடம் ஆவணி மாதம் எட்டாம் தேதி ஆங்கில மாதம் 24 புதன்கிழமை அன்று காலை 9 மணி அளவில் அம்மனுக்கு காப்பு கட்டி துவங்கிய திருவிழா ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டு, சாமி ஊர்வலம் என நடத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் 28 ஆம் தேதி ஞாயிறு அன்று தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் வெள்ளிவாயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் காப்பு கட்டி அம்மனுக்கு விரதம் இருந்து தீ மிதித்து தங்கள் வேண்டதல்களை நிறைவேற்றினார்கள்.
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை வெள்ளிவாயில் மேட்டு மாநகர் கிராம நிர்வாகிகள், பெரியோர்கள் மற்றும் இளைஞர்கள், மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.