இராமநாதபுரம், ஆக 7 –
ஏழாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணி நூல் துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா துவக்கி வைத்து பார்வையிட்டார். கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் சந்திரசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.