சீர்காழி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
சீர்காழி நகராட்சி சார்பில் தானியங்கி துணிப்பை இயந்திரம். பொது இடத்தில் வைப்பு. ஏ.டி.எம். இயந்திரம் போல் ரூ.10 செலுத்தி துணிப்பையை எடுத்துச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக அரசு நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் பொருட்கள், காய்கறிகள் வாங்க செல்லும் போது நெகிழிப்பைக்கு பதிலாக வீட்டிலிருந்து துணிப்பை எடுத்து சென்றிட மக்களுக்கு அவ்வப் போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே சீர்காழி நகராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாசு கட்டு பாட்டு வாரியம் ஆகியவற்றின் மூலம் சீர்காழி நகராட்சி வளாகத்தின் வெளியில பொதுமக்களின் பார்வையில் படும்படி தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மஞ்சள் பை என்ற வாசகத்துடன் வைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தில் பொதுமக்கள் ரூ.10 (காயி னாக) செலுத்தி எளிதாக ஏடிஎம் எந்திரம் போல் துடிப்பையை பெற்றுக் கொள்ள முடியும் இவ்வாறு கடைவீதி காமராஜர் வீதிக்கு வரும் மக்கள் இந்த இயந்திரத்தில் துணிப்பையை பெற்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். நகராட்சியின் அத்திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.