பொன்னேரி, ஏப். 22 -.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாளின்  ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பத்து தினங்களாக   பிரம்மோட்சத்திற்கான  கொடியேற்று விழா கடந்த 16ம் தேதி துவங்கியது இதனை அடுத்து ஐந்தாம் நாளான நேற்று சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சந்திப்பு உற்சவம் நடைபெற்றது .

அதனைத் தொடர்ந்து இன்று அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு பவனரத்தம் என்ற திருத்தேரில் ஸ்ரீதேவி,பூதேவியுடன் எழுந்தருளிய கரிகிருஷ்ண பெருமாள்   சண்டா மேளம் முழங்க, பக்தர்கள் படை சூழ, முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதில் பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டு திருத்தேரை வடம் பிடித்து கோவிந்தா கோவிந்தா என்ற குரல் முழக்கமெழுப்பி இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தின் காரணமாக நகரின் முக்கிய வீதிகளில் தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டு .தேரோட்டம் முடிந்தப் பின் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here