செங்கல்பட்டு, ஜூலை. 15 –
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும் இதில் சிறப்பு அழைப்பாளராக இரயில்வே காவல் ஆய்வாளர் மோகன், இரயில்வே உதவிப் பிரிவு பொறியாளர் சரவணன், இரயில்வே உதவிப் பிரிவு மருத்துவமனை மருத்துவர் அஸ்வின், இரயில்வே ஹெல்த் இன்ஸ்பெக்டர் சிந்து ஆகியோர் பங்கேற்று அப்பகுதி மக்கள் மற்றும் இரயில்வே ஊழியர்கள் மத்தியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் செங்கல்பட்டு கிளை மேலாளர் ஹரீஸ் சேகர், உதவி மேலாளர் இராகுல், உதவிப் பொறியாளர் காளிதாசன் உள்ளிட்டவர்களும் மற்றும் அந்நிறுவன ஊழியர்களும், இரயில்வே பணியாளர்கள் என திரளானவர்கள் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து, இரயில்வேக்கு சொந்தமான பூங்காவினை அந்நிறுவன முதன்மை மேலாளர் எஸ். குமார் தலைமையிலான அந்நிறுவன குழுவினர் மற்றும் செங்கல்பட்டு இரயில்வே உயர் மட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் அதனை சுத்தம் செய்து அம்மண்ணிற்கு ஏற்ற 200 க்கும் மேற்பட்ட மரங்களை அங்கு நடும் பணியினை மேற் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, அந்நிறுவனத்தின் சார்பில் காஞ்சிபுரம் கிளாக்காடி மற்றும் அச்சரப்பாக்கம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்விப்பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பாட்டுப் போட்டி நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வரைந்த ஓவியங்களை அப்பள்ளி வளாகத்தில் உள்ள சுற்றுச் சுவரில் அந்நிறுவனம் வரைந்துக்கொடுத்து அம்மாணவர்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில் அவர்களை பெருமைப் படுத்தினார்கள்.
மேலும் அப்பள்ளி வளாகம் பல்வேறு பகுதிகளில் அப்பகுதி மண்ணிற்கு ஏற்ற மரங்களை நட்டனர். தொடர்ந்து அப்பள்ளிகளுக்கு மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைத் தொட்டிகள் மற்றும் துடப்பான்கள் வழங்கினார்கள் இந்நிகழ்வில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை ஏற்றனர்.


























